Mayu / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில், 12 அடி உயரம் கொண்ட சரஸ்வதி சிலை இன்று (20) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இப்பாடசாலையில் 2017ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்ற மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் (அனுசரணையில்) இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வித்தியாலயப் பிரதி அதிபர் திருமதி சு. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும், கௌரவ அதிதிகளாகக் காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிரணவரூபன் மற்றும் முன்னாள் அதிபர் அருள்ராசா ஆகியோருடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலைக்குப் பூர்வாங்கக் கிரியைகள் நடைபெற்று, அதிதிகளால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
வ. சக்தி

28 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago