Editorial / 2025 நவம்பர் 17 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
பெருந் தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அரசியல் வாதிகளை கொடும் பாவி எரித்தனர்.அத்துடன் சவப்பெட்டி ஏந்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம், மஸ்கெலியா பேருந்து நிலையத்தில்ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வர்கள் மஸ்கெலியா நகரில் பதாகைகளை ஏந்திய வண்ணம் பிரதான வீதியூடாக பேருந்து நிலையம் வரை கோஷங்களை எழுப்பிய வண்ணம் பேருந்து நிலையம் வரை சென்றனர்.
அங்கு கருத்து தெரிவித்த தொழிலாளர்கள்
இலங்கைக்கு கடந்த 202 வருடங்களாக அன்னிய செலாவணி பெற்று தரும் பெருந் தோட்ட தொழிலாளர்கள் பெற்று கொடுக்கின்றனர் இவ்வாறு பெற்றுக் கொடுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித போராட்டம் இல்லாமல் தோட்ட நிர்வாகம் 200 ரூபாவும் அரசாங்கம் 200 ரூபாவையும் எதிர் வரும் ஜனவரி மாதம் முதல் வழங்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வந்து உள்ளார்.பாதீட்டு மூலம் அறிவித்து உள்ளார்.
இவ்வாறு வழங்கும் வேதனம் எப்படி வழங்க முடியும் என எதிரணியில் உள்ள அரசியல் வாதிகள் வாதிட்டு உள்ளனர்.அவ்வாறன அரசியல் வாதிகள் சற்று சிந்தித்துப் பாருங்கள் நாளாந்தம் குளவி கொட்டுக்கு இலக்காகிய அட்டை கடிக்கு இலக்காகும் மற்றும் வனவிலங்கு பாம்பு கடிக்கு இலக்காகுதல் இவ்வாறு பல இச்சைக்கு உள்ளாக்குவது பெருந்தோட்ட தொழிலாளர்கள். சிலோன் தேயிலை தூள் என்றால் உலகத்தில் தனிச்சிறப்பு அதை பெற்று கொடுப்பது பெரும் தோட்ட தொழிலாளர்கள்.
இனி வரும் காலங்களில் பெரும் தோட்ட தொழிலாளர்கள் ஏனைய சமூகங்களையும் சமமாக மதிக்க வேண்டும் எந்த ஒரு அரசியல் வாதியும் பெருந் தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கு எதிராக கதைக்க கூடாது என தெரிவித்தனர்.



42 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
3 hours ago