2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

34 வருடங்களின் பின் வழிபட அனுமதி

Editorial   / 2024 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு சென்று வழிபட வௌ்ளிக்கிழமை (16) அனுமதி வழங்கப்பட்டது. அங்கு பெருமளவிலான மக்கள் சென்று பொங்கல் பொங்கி சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். 

கடந்த முப்பது வருட காலத்திற்கும் மேலாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலய வழிபாடுகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டநிலையில் அங்கு சென்ற பொது மக்கள் ஆலயத்தை சிரமதானம் செய்ததன் பின்னர் பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர்.

நீண்ட காலத்தின் பின்னர் தமது ஆலயத்திற்குச செல்ல அனுமதிக்கப்பட்டதை மிகவும் சந்தோசமாக வரவேற்ற பொது மக்கள் ஆலயம் சிதைவடைத்திருப்பதை பார்த்து கடும் மனவேதனை அடைந்திருந்தனர்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகன், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், கடற்படை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் இன்று முதல்  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்கு  சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிருஷ்ணன் ஆலயம் என்ற காரணத்தால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசேட தினங்களிலும் வழிபட பொதுமக்கள் அனுமதி கோரியதால் அது தொடர்பாக உரிய தரப்புக்களுடன் பரிசீலிப்பதாகவும் வலிகாமம் வடக்கிலுள்ள ஏனைய காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X