2025 மே 16, வெள்ளிக்கிழமை

40 குளங்களில் 30 குளங்கள் மட்டுமே புனரமைப்பு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 18 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.றொசேரியன் லெம்பேட் 

  மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்புக்கும்  திட்டத்தில், நிதி பற்றாக்குறை காரணமாக  36 குளங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதில் 30 குளங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மிகுதி 6 குளங்களின் பணிகள்   நிறைவு பெறாமல் உள்ளதாக மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட தில் வரிகள் போக 233 மில்லியன் ரூபாய் நிதியே  அனுமதிக்கப்பட்டது.   இறுதியில் 80 மில்லியன் நிதியே எமக்கு கிடைத்தது.

அதில்  விவசாயிகளின் வேலை இடைநிறுத்தப்படக் கூடாது என்பதற்காக 130 மில்லியன் ரூபாவுக்கான வேலை செய்து முடிக்கப்பட்டுள்ளது.  இதன் படி ஒப்பந்த காரர்களுக்கு  50 மில்லியன் ரூபா கடனாக கொடுக்க வேண்டியுள்ளது.

இவர்களுக்கான கொடுப்பனவுகள் கொடுத்து முடிக்கப்பட்டதும் விடுபட்டிருந்த 6 குளங்களுடன் புதிதாக 7 குளங்களும் உள்வாங்கப்பட உள்ளது.

 மொத்தம் 13 குளங்கள் மன்னார் மாவட்டத்தில் புனரமைப்பு செய்யப்பட உள்ளது.   இவை அடுத்த வருடம் ஜனவரியின் பின்னரே ஆரம்பிக்கப்படும். என மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .