Editorial / 2022 ஒக்டோபர் 27 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் அமைப்பு அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (26) ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்தியது.
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 87ஆம் நாள் போராட்டம் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி கிராமத்தில் இடம்பெற்றது.
கவனயீர்ப்பு போராட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தின் விவசாய சங்கத்தினர், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் இணைந்தனர்.
அவர்கள் " எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை," போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலம் வளதாப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோயிலில் இருந்து பேரணியாக வருகைதந்தது. வளத்தாப்பிட்டி சந்தியில் தங்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அதன் பின்னர் கலைந்து சென்றனர். வி.ரி.சகாதேவராஜா



21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025