Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2022 ஜூன் 12 , பி.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர். ராஜலிங்கம்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனேகமான மக்கள் உணவு பெற முடியாத நிலையில், மண்ணெண்ணெய், எரிவாயு வரிசைகளில் பசி, பட்டினியுடன் கால்கடுக்க நின்று தவிப்பதை பரவலாகக் காணக்கூடியதாக இருக்கிறது.
மக்களின் இந்த மனம் குமுறச்செய்யும் நிலையை இயன்ற அளவு போக்கில் அவர்களுக்கு முடியுமான நிவாரணத்தை வழங்குவதே கிருஷ்ண பக்திக்கழகத்தினரின் நோக்கமாகும்.
இத்தகைய நெருக்கடி கால கட்டங்களில் மக்களின் துன்பத்தை இயன்றளவு போக்கும் வகையில், வாழ்வுக்காக உணவு (Food For Life) என்னும் திட்டத்தை உலகெங்குமுள்ள கிருஷ்ணபக்தி நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன.
இலங்கையிலும் ஏற்கனவே கிழக்கு மாகாண சூறாவளி, சுனாமி மற்றும் பல்வேறு அனர்த்தங்களின்போது இந்த திட்டத்தை கிருஷ்ணபக்தி கழகம் செயல்படுத்தியுள்ளதை மக்கள் அறிவர்.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இலங்கை கிருஷ்ணபக்தி கழகம் வாழ்வுக்காக உணவு திட்டத்தை செயல்படுத்தி மக்களுக்கு இயன்ற அளவு உதவ மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் பசி பட்டினியால் தவிக்கும் மக்களுக்கு சமைத்த உணவை வழங்கும் திட்டத்தை கிருஷ்ணபக்தி கழகம் ஆரம்பித்துள்ளது.
எரிவாயு, மண்ணெண்ணெய் இல்லாமல் உணவு சமைக்க முடியாத நிலையில் கிருஷ்ணபக்தி கழக அபிமானி ஒருவர் கரித்துண்டுகளை போட்டு எரிக்கும் அடுப்பு ஒன்றை கிருஷ்ணபக்தி கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.
அதுவும் போதுமானதாக இல்லாததால் அதுபோன்ற மேலும் பல அடுப்புகளைப்பெற்று இயன்ற அளவு அதிக உணவை சமைத்து துன்பப்படும் மக்களுக்கு வழங்குவதில் கிருஷ்ணபக்தி கழகத்தினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், நாட்டின் இந்த நெருக்கடி நிலை தீர்ந்து நிலைமை சீரடையும் வரை இத்திட்டத்தை செயல்படுத்துவதே கிருஷ்ணபக்திகழகத்தின் நோக்கமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago
9 hours ago