Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் நாயக் IMHO BUILDING கட்டிட திறப்பு விழா கர்சேனை அ. இ. த. வித்தியாலயத்தில் இடம்பெற்ற IMHO BUILDING கட்டிட திறப்பு விழா, ஏப்ரல் 10 ஆம் திகதி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இப்பாடசாலைக்கு நான்கு வகுப்பறைகள் கொண்ட கீழ் தளமும் மேல்மாடியும் ஆண்,பெண் மாணவர்களுக்கான தனித்தனி மலசலகூட வசதிகளும் கொண்ட அழகிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
கீழ் வகுப்பறை கணினிகள் கொண்ட கணினியறையாகவும் அடுத்தது அதிபரின் அலுவலகமாகவும் மேலே இரு வகுப்பறைகள் தளபாட வசதிகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல செயற்பாடுகளில் IMHO-USA ஈடுபட்டுள்ள போதிலும் IMHO BUILDING என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகும்.
இந்நிகழ்விற்கு IMHO நிறுவன ஆலோசனை சபை உறுப்பினர் Dr.Shan Theventhiran , IMHO நிறுவன தலைவர் Dr.Rajam Theventhiran , IMHO நிறுவன இலங்கை வதிவிடப்பணிப்பாளர் M.Radhakrishnan மற்றும் புத்தள, மாகோ வலய கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு உரையாற்றிய Dr.இராஜம் அம்மணி “இலவசக்கல்வியின் மூலமாக தாம் அடைந்த வைத்திய தகுதியை இந்நாட்டு மக்களுக்கு பயன்படுத்தவேண்டியே புலம்பெயர்ந்த நாடுகளில் தாம் பணிபுரிந்த போதும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பிற்கூடாக இத்தகைய கைங்கரியங்களை செய்ய முடிகின்றது” எனக்கூறினார் .
”ஒவ்வொரு குழந்தையும் கண்ணியத்துடன் கல்வி பெறத் தகுதியானவர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இலங்கையில், ஏறத்தாழ 30% குழந்தைகள் போதிய வசதிகளுடன் கூடிய கல்வியை அணுகுவதில் சவால்களை எதிர்கொள்கின்றனர். இப்பாடசாலை மாணவர்களின் கல்விக்கான அடிப்படைத்தேவையின் ஒருமுக்கியபகுதி இன்று நிறைவேறியுள்ளது” என்றார்.
ஏற்கனவே இப்பாடசாலைக்கு இசைக்கருவிகள், ஸ்மார்ட் போர்ட் என்பவற்றை வழங்கி மாணவர்களின் செயற்றிறன் வாய்ந்த கல்விக்குஉதவமுடிந்தமை தமக்கு மன மகிழ்ச்சியை தந்துள்ளது. எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago