2025 மே 19, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டல்...

Editorial   / 2018 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், டி.சந்ரூ,  

கம்பளைக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்தியக் கல்லூரியில், இந்திய அரசாங்கத்தின் 95 மில்லியன் ரூபாய் நிதி உதவியில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, பாடசாலை வளாகத்தில், நேற்று (10) முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாண கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன், மத்திய மாகாண சபைத்தலைவர் மதியுகராஜா, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, இலங்கைக்கான இந்திய கண்டி உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திர சிங்,  வலய கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் உட்பட மாணவர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X