2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய….

Editorial   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று (26) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராமத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கின்ற விநாயகப் பெருமானுடைய வருடாந்த உற்சவம்  சிறப்பாக இடம்பெற்றது

நாட்டில் ஏற்பட்றிருக்கின்ற கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் இந்த ஆலயத்தின்  நிகழ்வுகள்  மட்டுப்படுத்தப்பட்ட  பக்தர்களோடு ஆலய வளாகத்தில் இடம் பெற்றிருந்தது இருப்பினும் இம்முறை சுகாதார நடைமுறைகளை பேணி  குறிப்பிட்ட அளவான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது

சித்திரா பௌர்ணமி தினத்திலே ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் உடைய வருடாந்த  உற்சவம்  இடம்பெற்று வருகின்ற நிலையில் இம்முறையும் இந்த ஆலயத்தின் உடைய வருடாந்த உற்சவம் சுகாதார நடைமுறைகளை பேணியவாறு குறிப்பிட்ட  பக்தர்களோடு   சிறப்பாக இடம்பெற்றது

அடியவர்களின் காவடிகள் பால் சொம்பு தூக்கு காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன் களை பக்தர்கள் மேற்கொண்டிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது  குறிப்பாக போலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றி இந்த ஆலய உற்சவம் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தமை  குறிப்பிடத்தக்கது

நேற்றிரவு எம்பெருமான் உள்வீதி வெளிவீதி சுற்றி அடியவர்களுக்கு அருள்பாலித்திருந்தார். (சண்முகம் தவசீலன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X