Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 31 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு, அம்பாறை மாவட்டத்தில் இன்று (31) அஞ்சலி செலுத்தப்பட்டது.
கல்முனை, பாண்டிருப்பு எல்லைப்பகுதியில் உள்ள ஸ்ரீ அரசடி அம்மன் கோவில் முன்பாக அருகிலுள்ள பொதுக் கட்டடத்தில் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படம் வைக்கப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ்வஞ்சலி நிகழ்வை, கல்முனை, பாண்டிருப்பு வாழ் இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளதுடன், நிகழ்வில் சிவ ஸ்ரீ தங்கவேல் குருக்கள், சமூக சேவகர்கள், இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பகுதியிலும் இளைஞர்களால், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்பட பதாதை அஞ்சலி செலுத்தும் முகமாக சந்திக்கு சந்தி தொங்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள் - பாறுக் ஷிஹான்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .