2025 மே 16, வெள்ளிக்கிழமை

அயோத்தி ஶ்ரீராமர் கோவிலுக்கான அடிக்கல் கையளிப்பு

Editorial   / 2021 மார்ச் 18 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயோத்தி ஶ்ரீராமர் கோவிலுக்காக நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் கற்பக்கிரகத்தில் பூஜிக்கப்பட்ட அடிக்கல் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் இன்று (18) வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

கொழும்பு ஶ்ரீ மயூரபதி பத்திரகாளியம்மன் கோவிலில் இந்த நிகழ்வு, நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஶ்ரீ கோபால் பாக்லே, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொறகொட, சீதையம்மன் கோவிலின் அறங்காவலர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.பி. தேவராஜ், மயூரபதி ஆலய அறங்காவலர் எஸ். சுந்தரலிங்கம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இந்தியாவின் அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஶ்ரீராமர் கோவிலின் திருப்பணிக்கு அனுப்பும் பொருட்டு சீதாஎலியவிலிருந்து எடுக்கப்பட்டு கொழும்பு மயூரபதி பத்திரகாளி அம்மன் கோவிலில் பூஜிக்கப்பட்ட புராதனக் கருங்கல் இந்திய உயர்ஸ்தானிகரிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .