2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக  தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்  கைதிகளைஇ விடுதலை செய்யுமாறு வலியுறுத்திஇ முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாகஇ இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

'நல்லாட்சியின் சிறைகளில் நமது பிள்ளைகள் கையெழுத்திடுகிறோம் கருணை காட்டுங்கள்' என்ற தொனிப்பொருளில்இ முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்துஇ இதனை ஒழுங்கு செய்திருந்தனர்.

வடமாகாண சபை உறுப்பினர் துரைரைாசா ரவிகரன் கலந்துகொண்டுஇ கையெழுத்திட்டு திரட்டலை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.     

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்இ இன்று கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் இதனுடைய பிரதிகள் நல்லாட்சி அரசின் ஜனாதிபதிஇ பிரதமர்இஎதிர்க்கட்ச்சித் தலைவர்இ வடமாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்ததாக  வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .