2025 மே 01, வியாழக்கிழமை

ஆடிவேல்விழா பாதயாத்திரை ஆரம்பம்

Mayu   / 2024 மே 08 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ். தொண்டமானாறு  செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை 11ஆம் திகதி சனிக்கிழமை காலை ஜெயாவேல்சாமி தலைமையில் ஆரம்பமாகிறது.

அதற்கான சகல ஏற்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டு பூர்த்தி அடைந்துள்ளதாக பாதயாத்திரைக்குழுத்தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகல 7மாவட்டங்களையும் இணைத்து 55நாட்களில் 98ஆலயங்களைத்தரிசித்து 815கிலோமீற்றர் தூரத்தை நடந்துகடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமபாதயாத்திரையாககருதப்படுகின்றது.

சந்நதி கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவின் ஏற்பாட்டில் 23-வது வருடமாக இப் பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை பாத யாத்திரையில் கலந்து கொள்வோர் கட்டாயம் சமய ஆசார முறைப்படி கலந்து கொள்ள வேண்டும்.

21 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் வேஷ்டியோடும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் காவி சாறியுடனும் கலந்து கொள்ள வேண்டும். செல்லும் வழியில் உள்ள ஆலயங்களில் பஜனை மற்றும் சிரமதானத்தில் பங்கு கொள்ள வேண்டும்.

 பாடசாலை மாணவர்கள் மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் யாராவது  சமய ஆசார முறைக்கு மாறான நடத்தையில் ஈடுபட்டால் இடைநடுவில் நிறுத்தப்படுவார்கள் என்று ஜெயாவேல்சாமி மேலும் தெரிவித்தார்.

​மேலும், 55நாள் நீண்ட இப் பாதயாத்திரையில் பங்கு பற்ற விரும்பும் அடியார்கள் அல்லது உதவி செய்ய விரும்புபவர்கள் 0778386381,   0763084791 அல்லது 0776139932 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.

கதிர்காமக் கந்தன் ஆலயம் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .