Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2021 நவம்பர் 19 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் முள்ளிபுரம் பகுதியில் அரிய வகை ஆமடில்லா (எறும்புண்ணி) உயிரினமொன்று பொது மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்போது பொதுமக்கள் புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று அரியவகை உயிரினமான ஆமடில்லாவை (எறும்புண்ணி) உயிருடன் மீட்டு சிகிச்சையளிப்பதற்காக நிக்கவரட்டிய மிருக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட உயிரினமான ஆமடில்லா (எறும்புண்ணி) எதிரிகளைக் கண்டால் உடலை பந்து போன்று சுருட்டி வைத்துக் கொண்டு தம்மைக் பாதுகாத்துக் கொள்ளும் குணமுடையவென அதிகாரிள் தெரிவித்தனர்.
இவ் உயிரினமானது இலங்கையில் அழிவடைந்து வருவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். (எம்.யூ.எம்.சனூன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago