Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 02 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி வவுனியா வைத்தியசாலையின் சுகாதார தொழிற்சங்கங்கள், ஆர்ப்பாட்ட பேரணியொன்றை செவ்வாய்க்கிழமை (02) மேற்கொண்டுள்ளன.
வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் இருந்து ஆரம்பமான குறித்த பேரணி யாழ்வீதிவழியாக சென்று மீண்டும் வைத்தியசாலையினை அடைந்து நிறைவுபெற்றுள்ளது .
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
" சுகாதாரத்துறையின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட கொடுப்பனவு அனைவருக்கும் வழங்கப்படவேண்டும், அத்துடன் முறையான பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை, இதேவேளை நிலுவைக்கொடுப்பனவுகள், சீருடைக் கொடுப்பனவுகள் போன்றன நீண்டகாலமாக வழங்கப்படவில்லை,
இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் அதனால் எந்த பயனும் கிடைக்காத நிலமையே நீடிக்கின்றது. எனவே எமது கோரிக்கையினை அரசாங்கம் செவிமடுக்காது விடில் நாளையதினத்திலிருந்து தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தாயாராகிவருவோம் " என தெரிவித்துள்ளனர் .
குறித்த பேரணியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள்,சுகாதார ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர் .
க. அகரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025