2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இந்திய தூதுக்குழு…

Editorial   / 2022 ஜூன் 23 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய இருதரப்பு உதவிகள் தொடர்பிலான ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா இன்று (23)  காலை இலங்கை வந்தடைந்தார்.

இந்திய நிதி அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் திணைக்களத்தின் செயலாளர் அஜய் சேத், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி. ஆனந்த நாகேஸ்வரன் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே ஆகியோர் இந்த விஜயத்தின் போது வெளியுறவு செயலாளருடன் இணைந்து வருகை தந்துள்ளனர்.

இந்த விஜயத்தின் போது இந்தியத் தூதுக்குழுவினர் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளனர். நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் குறுகிய கால மற்றும் நீண்ட கால உதவித் தேவைகள் குறித்து தூதுக்குழுவினர் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X