2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இரு இராணுவத் தளபதிகளின் சந்திப்பு

Mayu   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய இராணுவத்தின் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் அழைப்பின் பேரில்

நேற்றைய தினம் திங்கட்கிழமை (04) புதுடெல்லி இந்திய இராணுவ தலைமையகத்திற்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அவரது பாரியார் ஜானகி லியனகே மற்றும் இலங்கை இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.எம் பெர்னாண்டோ ஆகியோர் விஜயத்தை மேற்கொண்டனர்.

குறித்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இரு இராணுவங்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு இடையிலான நட்புறவு தொடர்பான விடயங்கள் மீளாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இக்கலந்துரையாடலின் முடிவில் இரு தரப்பினரும் பாராட்டு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X