2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இறந்து கரையொதுங்கும் மீன்கள்...

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - முந்தல் சிறுகடலில்  கடந்த இரண்டு நாட்களாக மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருவதனால் நூற்றுக்கு  மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிகின்றனர்.

அந்த வகையில் முந்தல்,கொத்தாந்தீவு, கட்டைகாகாடு, வட்டவான்,பூனைப்பிட்டி, ஆண்டிமுனை உள்ளிட்ட சிறுகடலை உள்ளடக்கிய பல பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீன்கள் உயிரிழந்து கரை ஒதுங்கி வருகின்றது.

இதன் காரணமாக இந்த சிறுகடலை நம்பி ஜீவனோபாயத் தொழிலான கடற்றொழிலை நம்பி வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தமது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் குறிப்பிடுகின்றனர்.

கிளாத்தி, செத்தல், மன்னா, திலாப்பியா மற்றும் விரால் உள்ளிட்ட பல வகையான மீன்களே இவ்வாறு உயிரிழந்த  நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

இவ்வாறு, மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவது தொடர்பில் புத்தளம் மாவட்ட நீரியல் வளத்துறை அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.எம்.பி.கே.ரணதுங்கவிடம் கேட்ட போது, கடந்த காலங்களில்  முந்தல் சிறுகடலில் நீரில் உப்பின் தன்மை குறைவடைந்துள்ளதனாலேயே மீன்கள் உயிரிழப்பதற்கான காரணம் எனத் தெரிவித்தார்.

மேலும், குறித்த சிறுகடலில் உயிரிழள்ள மீன்கள் சிலவற்றை பரிசோதனைக்காக நாரா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ரஸீன் ரஸ்மின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .