2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில்…

Editorial   / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

உயிர்த்த ஞாயிறுத்  தாக்குதல் இடம்பெற்று  இரண்டாவது வருட நினைவு தினம்  வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார்  தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது. 

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு பிரபல விடுதிகளிலும், தேவாலயம் மீதும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அத்தாக்குதலில் பலியான மக்களை நினைவுகூர்ந்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும்  வவுனியா அந்தோனியார்  தேவாலயத்தில்  அருட்தந்தை ஜெயபாலன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட வழிபாடு  இன்று காலை இடம்பெற்றது.  

அத்தேவாலயத்தில் பொலிஸ், இராணுவத்தினரின்  பலத்த பாதுகாப்புடன் வழிபாடுகள்  இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X