Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஜூன் 02 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று மிகவேகமாக பரவிவரும் நிலையில், ஏழை,
எளியவர்கள், வயோதிபர்கள், வீதியோரங்களில் அநாதவர்களாக இருப்போர்,
உள்ளிட்டோருக்கு பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தனி நபர்களும்
தங்களுக்கு இயன்றளவிலான உதவிகளைச் செய்து, அவர்களுக்கு உதவி
கரங்களை நீட்டியுள்ளனர்.
கல்முனையில்...
கொரோனா தொற்றியினால் அமுலில் உள்ள பயணத்தடை கட்டுப்பாட்டினால் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள யாசகர்களுக்கு கல்முனை பிராந்திய ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கிணங்க கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். ரோஷன் அக்தரினால் உணவு வழங்கப்பட்டுள்ளது. (நூருள் ஹுதா உமர்)
காரைதீவில்...
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பட்டினி நிலைமைக்குச்சென்ற மக்களுக்கு சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேச சபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், ஒரு தொகுதி உலருணவுப் பொதிகளை நேற்று (01) வழங்கிவைத்தார்.
ஆலையடிவேம்பு மற்றும் தம்பிலுவில் பிரதேசங்களில் நலிவுற்ற 100 குடும்பங்களுக்கு சுகாதார நெறிமுறைக்கிணங்க அவர் வழங்கிவைத்தார். (வி.ரி.சகாதேவராஜா)
மண்முனையில்….
கொரோனாவின் மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கான வாழ்வாதார நிவாரண உதவிகளை அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்தும் வழங்கிவருகின்றன.
விசேட தேவையுடையோர் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினருக்கு (ஒரு குடும்பத்துக்கு தலா சுமார் 1300 ரூபாய் பெறுமதியான) பொருள்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று (01) செவ்வாய்க்கிழமை(1) மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.
தமிழர் முன்னேற்ற கழக அமைப்பினர் அனுசரனையுடன் சில வர்த்தகர்களின் உதவியுடன் இவ் நிவாரண பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டது.மட்டு மாநகர சபை பிரிவுக்குள் தெரிவு செய்யப்பட்ட 1000 குடும்பங்களுக்கு இவ் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. (க.விஜயரெத்தினம்)
திருக்கோவிலில்…
கொரோனா தொற்று காரணமாக தாண்டியடி மற்றும் திருக்கோவில்.04 பகுதிகளில் உள்ள வாழ்வாதாரத்தை இழந்த மற்றும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நிவாரணப்பொதிகள் (உலருணவுப்பொதிகள்) வழங்கிவைக்கப்பட்டன. (வி.ரி.சகாதேவராஜா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago