2025 மே 16, வெள்ளிக்கிழமை

உயிர்த்த ஞாயிறு…

Editorial   / 2021 ஏப்ரல் 04 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேசுபிரான் சிலுவையில் இறையப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற உயிர்த்த ஞாயிறு இன்றாகும். உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நள்ளிரவு நடைபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்களினால் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன.

இதன்போது 2019 ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் அவரது ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன.

மெழுகுதிரி செபிக்கப்பட்டு நீரினுல் அமிழ்த்தப்பட்டு புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டார்கள்.

இதன்போது உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் பக்தர்களுக்கு ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பேணியவாறு நடைபெற்ற இந்த வழிபாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட அடியார்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (கிருஷ்ணகுமார்)

 

ஹட்டனில்… (படங்கள் சுதத் எச்.எம். புஞ்சிஹேவா)

 

திருச்சிலுவை ஆலயத்தில்...

ஈஸ்டர் தின நிகழ்வுகள், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மலையக கிறிஸ்தவ ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மிகவும் அமைதியான முறையில (இன்று) இடம்பெற்றன.

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் தேவ ஆராதனைகள் ஆலய பங்கு தந்தை நியூமன் பீரிஸ் தலைமையில் நடைபெற்றன.

 ஈஸ்டர் தின திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஈஸ்டர் தினத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மா சாந்திக்காக விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. (எஸ்.கணேசன்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .