Editorial / 2026 ஏப்ரல் 24 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். எச். எம். சியாஜ்
உலக அமைதியை வலியுறுத்தி "அமைதிக்கான நடைபயணம்" எனும் மகுடத்தின் கீழ் அமெரிக்காவில் 110 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்ட வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், தற்போது இலங்கையில் தமது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர். தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராமய வரை முன்னெடுக்கப்படும் இந்த அமைதி நடைபயணத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு, இன்று (ஏப்ரல் 24) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பமானது.
இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார். ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணத்தின் மூன்றாம் நாள் பயணம், மாவனல்லை - பெலிகம்மன வித்தியாவர்த்தன பிரிவேனா போத்குல் விகாரையில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago