Editorial / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோஸிஸ்) தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வு, புதன்கிழமை (18) இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸடீனின் ஆலோசனைக் அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதனின் தலைமையில் இந்த விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டன
இதில் எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதன் போது சாய்ந்தமருது குடாக்கரை மேற்கு விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர்களும், பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நூருல் ஹுதா உமர்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .