2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

ஏதுவான சூழலுக்காக…

Editorial   / 2021 ஜூன் 11 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பழைய பஸ்கள் பேருந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளன.

“அந்த வளங்களின் அதிகரிப்பானது மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டது” என அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில் பஸ்கள் இறக்கிவிடப்பட்டுள்ளன.

பயன்படுத்த முடியாது கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் புகையிரதப் பெட்டிகளை இறக்கி விடுவதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு  ஏதுவான கடல் நீரடிப் பாறைக்கு இணையான  சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில்,  கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் நேற்று (11) ஆரம்பிக்கப்பட்ட, குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 30 பஸ்கள் கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. (நடராசா கிருஸ்ணகுமார்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X