Editorial / 2022 ஏப்ரல் 26 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய சக்தி பாத யாத்திரை இன்று(26) கண்டியில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த பாத யாத்திரைக்கு சுமார் ஒரு மணித்தியாலம் முன்னதாகவே ஆயிரக்கணக்கான மக்கள் கண்டிக்கு வருகைத் தந்து கொண்டிருந்தனர்.
கண்டி மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளையும் உள்ளடக்கியவாறு வருகைத் தந்த மக்களால் கண்டி நகரம் நிரம்பி வழிந்தது. காலை 8 மணிக்கு ஆரம்பமாக வேண்டி இருந்த குறித்த பாத யாத்திரை அதிகமான மக்கள் கூட்டம் வருகைத் தந்ததால் 9:30 மணி வரை ஆரம்பிக்க முடியாதிருந்தது.
கண்டி பொதுச்சந்தையிலிருந்து ஆரம்பமான பேரணி பிற்பகல் 2 மணியளவில் பேராதனையை வந்தடைந்தது.
பேராதனை பல்கலைக்கழகத்தை இந்த பேரணி அண்மித்த போது, பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவும் புத்திஜீவிகளுடன் இணைந்த பெருந்திரளான மக்கள் எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்றனர்.
இன்றுக் காலை ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புனித புத்தரின் தந்தத்தை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், மாநாயக்கர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிர்வாத பூஜையில் கலந்துகொண்டும் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் வரலாற்று சிறப்புமிக்க நாகதேவாலயத்திற்கு சென்று இறை ஆசியையும் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன மகாநாயக்க தேரரை சந்தித்த ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டார்.
அதனையடுத்து, மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் பாரிய பாத யாத்திரை பேரணியில் கலந்து கொண்டார்.
கண்டி, பேராதனை, கிரிபத்கும்புர, பிலிமத்தலாவ மற்றும் கடுகன்னாவ ஊடாக மாவனெல்லைலை நேற்று வந்தடைந்த யாத்திரை, கலிகமுவுக்கு நாளை(27) செல்லும்.
எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பை சென்றடையும். சுதந்திரப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் மே முதலாம் திகதி 'நூற்றாண்டின் மே பேரணி' நடைபெறவுள்ளது.

22 minute ago
33 minute ago
40 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
40 minute ago
59 minute ago