2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி

George   / 2016 நவம்பர் 27 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த முகப்பு பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (27) காலை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.  

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வலிவடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சதீஸ், பருத்தித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் எஸ்.பன்னீர்ச் செல்வம், மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியில், தற்போது பாரிய இராணுவமுகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அம் இராணுவமுகாமின் வாயில் பகுதியிலேயே சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X