2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு துறைமுகத்தில் உலகில் பழமையான கப்பல்

George   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலேயே மிகவும் பழமையான “தி பேர்ல் ஒஃப் நோர்வே” என்ற புனைப்பெயர்க் கொண்டு அழைக்கப்படும் “சோலன்டெட்” (Sørlandet) என்றக் கப்பல், கொழும்பு துறைமுகத்தை ஞாயிற்றுக்கிழமை (23)  வந்தடைந்தது.

எதிர்வரும் 30ஆம் திகதி வரை கொழும்பில் நங்கூரமிடப்பட்டிருக்கும் இந்தக் கப்பல், உலகம் முழுவதுக்குமான 2 வருடகால பயணத்தை மேற்கொண்டு 70 உயர்பள்ளி மாணவர்களுடன் இலங்கைக்கு வந்துள்ளது.

கடந்த 1927ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கப்பல், பயணிக்கவுள்ள 22 நாடுகளின் 44 துறைமுகங்களுக்குள் கொழும்பு துறைமுகமும் அடங்குகின்றது.

இலங்கைக்கான இந்தக் கப்பலின் விஜயத்தின் போது, இலங்கையிலுள்ள கடல்சார்ந்த கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும், கப்பலில் வருகை தந்துள்ள 70 மாணவர்களுக்கும் இடையிலான அனுபவப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நிகழ்வுகள், இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .