2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

கண்டனப் போராட்டம்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

 
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, உரத்தட்டுப்பாடு, ஆசிரியர்களின் சம்பள உயர்வுப் போராட்டம், மற்றும் அரசாங்கத்தின் அராஜக போக்கு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி ராகலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டன போராட்டம் இன்று  (24) காலை 10.15 மணியளவில் ஆரம்பமானது.
 
அண்மையில் தலவாக்கலை நகரில் இடம்பெற்ற கண்டன போராட்டத்தின் இரண்டாவது போராட்டமாக இப் போராட்டம்  நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேசத்தை மய்யப்படுத்தி ராகலை நகரில் இடம்பெற்று வருகின்றது.
 
இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும்  பாராளுமன்ற உறுப்பினரான வேலுசாமி இராதாகிருஷ்ணன், வேலுகுமார்,
மயில்வாகனம் உதயகுமார், உள்ளிட்ட மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர் இரா.ராஜாராம். சோ.ஸ்ரீதரன்,பேராசிரியர் விஜயசந்திரன்,கணபதி நகுலேஸ்வரன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 
 












  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X