Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2022 ஜனவரி 04 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் இன்று (04) காலை 9 மணியளவில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் அனுமதி பெறாது இணுவில் ஆரம்ப பாடசாலை முன்பாக நடைபாதையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவரை, அங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நேற்று (03) முற்பட்டனர்
அப்போது, அந்த வியாபாரி, வருமானவரி பரிசோதகர், சுகாதார பரிசோதகர் ஆகியோரை அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில், பிரதேச சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளி மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தவிசாளரால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆனாலும் குறித்த பகுதியில் இன்றும் தொடர்ந்து வியாபாரம் நடைபெறுவதாக தெரிவித்து பிரதேச சபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“இன்றும் அவ்விடத்தில் வர்த்தகம் இடம்பெறுகின்றது. அதனை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் கருணாகரன் தர்ஷன் தெரிவித்தார். (படங்களும் தகவலும் நிதர்சன் வினோத் )
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago