2025 மே 19, திங்கட்கிழமை

கலந்துரையாடல்…

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொண்டு, புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஜப்பான் நாட்டின் வியாபார தூதுக் குழுவுடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நேற்று (14) கலந்துரையாடினார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில்இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஜப்பான் நாட்டின் பிரபல தொழிலதிபர் லொஹிஹரா தலைமையிலான தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தை மையமாக வைத்து முதலீடுகளை மேற்கொள்வது சம்பந்தமாகவும், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள் தங்களது பயிற்சிநெறியுடன் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.

(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X