2025 மே 16, வெள்ளிக்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் (ஜனாஸாக்கள்) நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் நேற்று (17)  கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

கவனயீர்ப்பு நடைபவனியில் பங்கேற்றவர்கள்  இஸ்லாத்தின் இறுதிக்கடமையான ஹஜ் பணயத்தின்போது  அணிகின்ற தைக்காத வெள்ளைப் புடைவை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நமக்காக  நாம் அமைப்பின் தலைவர் ஏ.எம்எம். பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு நடைபவனி ஏறாவூர் முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயல் முன்றலிலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதிவழியாகச் சென்று  மணிக்கூட்டுக்கோபுரச் சந்தியை அடைந்தது.   பின்னர் அங்கிருந்து காதியார் வீதிவழியாக பிரதேச செயலகத்தில் முடிவடைந்தது.

அங்கு ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான, மகஜர் ஒன்று பிரதேச செயலாளர்   திருமதி நிஹாறா மௌஜுதிடம்  கையளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .