2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

காட்சிப் பொருளானது...

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 19 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கே. குமார்

கடந்த மாதம் 20ஆம் திகதி நானுஓயா - ரதல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சேதமடைந்த பஸ், அங்கிருந்து அப்புறப்படுத்தப்படாமல் குறித்த பிரதான வீதியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இவ் விபத்தில் பலத்த சேதமடைந்த பஸ், ஒரு மாதமாகியும் நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பிரதான நகரில் வீதியோரம் வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா நகரம் உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் நகரம் என்பதுடன், நுவரெலியா பகுதிக்கான ரயில் மத்திய நிலையமாகவும் நானுஓயா நகரம் காணப்படுகின்றது.

இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பது போல் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள பஸ்ஸையும் பலர் படம் பிடித்து செல்கின்றனர். அத்துடன் வீதியோரம் இருக்கும் பஸ்ஸை பார்த்து விட்டுச் செல்லும்  ஏனைய வாகன சாரதிகளிடையே விபத்து தொடர்பான அச்சம் ஏற்படுவுதாகவும் தெரிவிக்கின்றனர் .

எனவே சம்பந்தப்பட்டவர்கள்  குறித்த சேதமடைந்த பஸ்ஸை, பொது மக்கள் பார்வையிடாத வகையில் மறைமுகமான இடத்தில் அல்லது முழுமையாக மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X