Freelancer / 2023 ஒக்டோபர் 01 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தமது கையளித்த சிறுவர்களுக்கான நீதி கோரியும், நீதிபதி பதவி விலக காரணமான அரசின் செயற்பாட்டுக்கு எதிராகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெக்கப்பட்டது,
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் உள்ள நாட்டில் எமக்கு நீதி எப்போது?, போன்ற பல்வேறு பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும், சிறுவர் மற்றும் குழந்தைகளின் படங்களையும் கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த போராட்டத்தில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சண்முகம் தவசீலன்





17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025