2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

காணிப்பத்திரம் வழங்க வேண்டும்

Mayu   / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.ரி.சகாதேவராஜா

பொத்துவில் மீள்குடியேற்ற கனகர் கிராமத்தில் பொதுமக்கள் இன்று(26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த பல வருட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு அண்மையில் 73 குடும்பங்களுக்கு காணி பத்திரம் வழங்கப்பட்டது. இப் பத்திரங்கள் ஏனையவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது .இதனை காரணங்காட்டி அனைவருக்கும் காணி பத்திரம் வழங்கப்பட வேண்டும் என கனகர் கிராம மக்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொத்துவில் பிரதேச செயலாளர் இது விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும் .

எமக்கும் காணி உறுதிப் பத்திரம் வழங்க வேண்டும். காலாகாலமாக இருந்து வந்த எமது பூர்வீக காணிகளை விரைவாக பூரணமாக ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

33வருடங்களாக காடுமண்டி மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த பொத்துவில் கனகர் கிராம மக்களது காணிகள் பூரணமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும் சமுக செயற்பாட்டாளருமான பெருமாள் பார்த்தீபன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் த.சுபோதரன் உள்ளிட்ட பல பிரமுகர்களும் சமூகமளித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X