2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்ட சென்ற பிரதமர்

R.Tharaniya   / 2025 மே 12 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் ஹரிணி அமர சூரிய

நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை ஞாயிற்றுக்கிழமை (11) அன்று இரவு பிரதமர் கலாநிதி  ஹரிணி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு  நேரில் சென்றுபார்வையிட்டார். 

இதன் போதுஅங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்து ஆராய்ந்தார்

இதேவேளை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் சென்றிருந்தார்.  சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களால் ஒவ்வொரு வருடமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன

இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்பது எமக்கு தெரியும் இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என தெரிவித்தார்.

சதீஸ் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X