Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Janu / 2023 டிசெம்பர் 21 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி அலுவலகம், சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுயில் வருடாந்தம் ஒழுங்கு செய்யும் விஷேட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு மற்றும் கிறிஸ்மஸ் வலயம் ஆகியவற்றை ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை (20) ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் மின்விளக்குகளை ஏற்றி இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
கிறிஸ்மஸ் கரோல் இசை நிகழ்வு இலங்கை கடற்படையின் பாடல் மற்றும் வாத்தியக் குழுவினரால் நிகழ்த்தப்பட்டதுடன், இந்த கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு டிசம்பர் 23 ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலக வளாகத்தில் இரவு 7.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.
மேலும் வியாழக்கிழமை (21) இலங்கை விமானப்படையினரும், வெள்ளிக்கிழமை (22) இலங்கை இராணுவத்தினரும் , சனிக்கிழமை (23) இலங்கை பொலிஸ் பாடல் மற்றும் வாத்தியக் குழுவினரும், இணைந்து கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.
ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
35 minute ago
39 minute ago