2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கூலித்தொழிலாளியின் குடும்பத்துக்கு உதவி

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஜவ்பர்கான், வ.சக்தி

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறிய நிலையில் எந்த அடிப்படை வசதியும் அற்ற குடிசையில் வாழ்ந்த குடும்பம் ஒன்றுக்கு கல் வீடு ஒன்றைக் கட்டி வழங்குவதற்கான ஏற்பாட்டை சுவிஸ் உதயம் அமைப்பு முன்னெடுத்துள்ளது.

செங்கலடி, கரடியன்குளம் பகுதியில் களிமண் வீட்டில் யானைகளின் அட்டகாசத்துக்கு மத்தியில், மூன்று குழந்தைகளுடன் வாழும் கூலித்தொழிலியின் குடும்பத்துக்கே இந்த வீட்டைக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிநிதிகள் இப்பகுதியில் கள விஜயத்தை மேற்கொண்டபோது, மேற்படி குடும்பத்தின் நிலைமை தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு, சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச் சங்கத்தின் கவனத்துக்கு அவை கொண்டுவரப்பட்டன.

அதனை தொடர்ந்து, சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் துரைநாயகத்தின் மகனின் பிறந்த நாளை முன்னிட்டு, மகன் விஜி மற்றும் மகள் சுஜி ஆகியோரின் நிதிப் பங்களிப்பினால் சுமார் 6 இலட்சம் ரூபாய் செலவில் குறித்த வீட்டை  அமைத்துக் கொடுப்பதற்கான ஆரம்ப பணிகள், நேற்று (26) ஆரம்பித்துவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X