2024 மே 08, புதன்கிழமை

கைத்தறி உற்பத்தி கிராம திறப்பு விழா

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன் 

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நொச்சிமுனை கிராம சக்தி மக்கள் சங்கத்தினரின் கைத்தறி உற்பத்தி கிராம திறப்பு விழா  செவ்வாய்க்கிழமை (24) திகதி  நொச்சிமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.

"ஒரு கிராமத்திற்கு ஒரு உற்பத்தி இடம்பெறல்" எனும் தொனிப்பொருளில் நொச்சிமுனை பிரிவில் கைத்தொழில் கிராமத்தை உருவாக்கி அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் அப்பகுதியில் ஏற்படும் சமூக சீர்கேடுகளில் இருந்து மக்களையும் இளைஞர்களையும் சமூகத்தையும் பாதுகாத்து குடிசைக் கைத்தொழிலை மேம்படுத்துவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

கிராம சக்தி மக்கள் சங்க உறுப்பினர்கள் ஏறத்தாழ 20 பேர் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். இதற்குத் தேவையான பயிற்சிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் மூலப்பொருட்களை கிராமிய தொழில் துறை திணைக்களம் வழங்குவதுடன் அவற்றிற்குரிய சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X