2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்

Princiya Dixci   / 2021 ஜனவரி 28 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, வ.திவாகரன், வ.சக்தி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு,  மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே இன்று (28) காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பொலிஸாரால் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும் நிகழ்வு அமைதியான முறையில், சுகாதார வழிமுறைகளை பிற்றி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு ,மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களின் ஆத்மா சாந்திவேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி தலைவர் கி.சேயோன், வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தி.தீபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் திகதி இடம்பெற்ற இறால் வளர்ப்பு பண்ணை படுகொலையும் 1992ஆம் ஆண்டு ஜுன் 12ஆம்  திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்ந்து ஏறக்குறைய 239 பேர் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை நினைவு கூரும் வண்ணமே, கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2,000ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .