2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

கொட்டகலையில் ’பிரார்த்தன லிங்கம்’ பிரதிஷ்டை

Kogilavani   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

கொட்டகலை தர்மபுரம் அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சமேத சுந்தரேஸ்வரர் கோவில் முன்றலில் 'பிரார்த்தன லிங்கம்' பிரதிஷ்டையும் அபிஷேக பூஜையும், இன்று (15) காலை 5.15 மணியளவில் நடைபெற்றது.

இலங்கை தீவெங்கும் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள உலக சைவத்திருச்சபையின் அனுசரணையில் மேற்படி சிவலிங்கமும் நந்தி, பலிபீடமும் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கனடா பெரிய சிவன் கோவிலை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலக சைவத்திருச்சபையின் ஸ்தாபகர் அடியார் விபுலாநந்தாவின் வழிகாட்டுதலின் பேரில் சுந்தரேஸ்வரர் கோவில் பரிபாலன சபையினர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 
சிவலிங்க பிரதிஸ்டையும் விசேட பூஜைகளும் கோவிலின் பிரதம குருக்கள் சந்திரகாந்த் 

தலைமையில் நடைபெற்றது. இன்று (15) மாலையும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X