2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொழும்பில் உலக ஹிந்தி தினம்

Mayu   / 2024 ஜனவரி 11 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக ஹிந்தி தின நிகழ்வுகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தால் 2024 ஜனவரி 10-11 ஆகிய திகதிகளில் கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.

களனிப் பல்கலைக்கழகம்இ ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகம், ரஜரட்ட பல்கலைக் கழகம், இலங்கை கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகள் பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவின் கர்மா தேவி ஞாபகார்த்த பி ஜி கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை மன்றக் கல்லூரியிலும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்திலும் இந்த இரு நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

உலக ஹிந்தி தின நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் வைத்தியர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் பங்கேற்றிருந்த நிலையில் உயர் ஸ்தானிகர் ஶ்ரீ சந்தோஷ் ஜா 10 ஆம் திகதி அன்று நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார். அத்துடன் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அ.அரவிந்த குமார் கௌரவ விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

முதல் நாளன்று நடைபெற்ற மூன்று அமர்வுகளில் எழுத்து மூலமான சமர்ப்பணங்கள் 25 ஹிந்தி புலமையாளர்களால் முன்வைக்கப்பட்டிருந்தன. ஹிந்தி இலக்கியத்தில் பௌத்தத்தின் தாக்கம் முதல் இலங்கையில் இந்தியின் பிரபல்யம் வரை அதற்கான தலைப்புகள் வழங்கப்பட்டிருந்தன. முதல் நாள் நிகழ்வுகளில் 200க்கும் மேற்பட்ட புலமையாளர்கள் மற்றும் மாணவர்கள்

கலந்து கொண்டனர். இம்மாநாட்டின் இரண்டாம் நாளில், பிரதி உயர் ஸ்தானிகர் வைத்தியர் சத்யாஞ்சல் பாண்டே அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். அத்துடன் கிட்டத்தட்ட 20 ஆய்வுகள் ஹிந்தி மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்திய அரசாங்கத்தின் ஹிந்தி மத்திய நிறுவனம் ஏற்பாடு செய்த ஹிந்தி தேர்வுகளுக்கான தகுதிச் சான்றிதழ்களும் இலங்கை மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 1949 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் ஹிந்தி மொழி பேசப்பட்டதைக் குறிக்கும் முகமாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி 10 ஆம் திகதி உலக ஹிந்தி தினம் கொண்டாடப்படுகின்றது. 1975 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே முதலாவது உலக ஹிந்தி மாநாடு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் 88 பாடசாலைகளிலும் 7 பொதுப் பல்கலைக்கழகங்களிலும் ஹிந்தி மொழியானது வெளிநாட்டு மொழியாக கற்பிக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .