2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சிங்கப்பூரில் தீபாவளி ரயில்...

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், சிங்கப்பூர் தரைவழிப் போக்குவரத்து அதிகாரசபை தீபாவளியைக் கருப்பொருளாகக் கொண்ட விசேட ரயில் ஒன்றை சேவைக்குவிட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளது.

இந்த ரயில், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் ஹ பூன் வானினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில், சிங்கப்பூரிலுள்ள 'லிட்டில் இந்தியா' புகையிரத நிலையம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறான அலங்காரங்களையும் கொண்டுள்ளது.

இந்த ரயில், சிங்கப்பூர் தரைவழிப் போக்குவரத்து அதிகாரசபையினாலும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் பாரம்பரிய சங்கத்தாலும் கூட்டாக வடிவமைக்கப்பட்டு சேவைக்கு விடப்பட்டுள்ளது.

'லிட்டில் இந்தியா' பெருமளவில் தமிழர்கள் வாழும் பிரதேசமாகும். சிங்கப்பூரில் தமிழ் உத்தியோகபூர்வ மொழி எனும் அந்தஸ்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X