2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

செங்கலடியில் ஆர்ப்பாட்டப் பேரணி

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 22 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் செயற்பாடுகளைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செங்கலடிப் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.  

செங்கலடி இலங்கை வங்கிக்கு முன்பாக பேரணி ஆரம்பமாகி செங்கலடி -பதுளை வீதிச் சந்திவரை சென்றதுடன், அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்தப் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், இந்துக்குருமார்கள், இந்துமத அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அண்மையில் பன்குடாவெளிப் பிரதேசத்திலுள்ள இந்துக்குரு ஒருவரின் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு புத்தர் சிலைiயை குறித்த தேரர் வைக்க முனைந்ததுடன், இந்துக்குருவையும் தகாத வார்த்தைகளினால் ஏசியுள்ளார்.
இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்குமாறு கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரனிடம்  ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் கையளித்துள்ளனர்.

இந்த ஊர்வலத்தில் இந்துமத குருக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .