2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

சந்திப்பு...

Editorial   / 2025 ஜனவரி 21 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோஸ் இக்னாசியோ சன்சேஸ் அமோர் (Jose Ignacio Sanchez Amor) உள்ளிட்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்வை வௌ்ளிக்கிழமை (17)  சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டிருந்தார்.

 

இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் சபாநாயகருக்கும், புதிய அரசாங்கத்திற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் குறித்த இறுதி அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் தனது பாராட்டைத் தெரிவித்தார். இதில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வகிபாகத்தைப் பாராட்டிய அவர், இந்த ஆணைக்குழுவை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருப்பதற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

 

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார். உண்மையான ஜனநாயகப் பண்புகளுடன் கூடிய, மிகவும் வெளிப்படையான, ஊழல் இல்லாத நிர்வாகத்தை நோக்கி அரசாங்கம்  தற்போது செயற்பட்டு வருவதாகவும் சபாநாயகர் வலியுறுத்தினார். அத்துடன், இந்த நாட்டில் முதல் முறையாக இயலாமையுடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும்  சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X