2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம்

Editorial   / 2021 மே 10 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமா​டிக் கொண்டிருக்கிறது.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அவற்றை கடைப்பிடிப்பதில்லை.

முகக்கவசம் அணியாத பொதுமக்களை, பொலிஸார் அப்ப​டியே  தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடி​யோக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

மன்னார், பண்டாரவளை மற்றும் மட்டக்களப்பில் பொதுமக்களை இவ்வாறு, பொலிஸார் தூக்கிச்சென்றிருந்தனர்.

அதேபோல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, முக்கிய கூட்டமொன்றில், முகக்கவசம் அணியாது அமர்ந்திருக்கின்றார். இந்த கூட்டம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அவரை ஏன்? பொலிஸார் தூக்கிச் செல்லவில்லை என்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X