2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சர்வ மத வழிபாடுகளுடன் இலங்கை விமானப்படையின் புதுவருட பணிகள் ஆரம்பம்

J.A. George   / 2022 ஜனவரி 04 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலர்ந்த 2022 புத்தாண்டை தொடர்ந்து விமானப்படை தலைமை காரியாலயத்தில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  பங்கேற்பில்   சர்வ மத  வழிபாடுகளுடன் இலங்கை  விமானப்படையின் புதுவருட பணிகள்  நேற்று(03) ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது விமானப்படை தளபதியினால்  புதுவருட உரை நிகழ்த்தப்பட்டது.  இவை அனைத்தும்  வீடியோ தொழில்நுட்பம் மூலம் அனைத்து  விமானப்படைத்தளங்களுக்கும்  நேரடியாக ஒளிபரப்பட்டது.

தனது உரையின்போது  2022 ம் ஆண்டு புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்த விமானப்படை தளபதி, கடந்த 2021 ஆண்டு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு சிறப்பாக செயற்பட்டமைக்கு அனைத்து விமானப்படை அங்கத்தவரக்ளுக்கும் தனது பாராட்டுகளை  தெரிவித்தார்.

மேலும், மலர்ந்திருக்கும் புதிய வருடத்தில் நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டவும் நாட்டை கட்டியெழுப்பவும்  அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமென்று அவர் கூறினார்.

புதுவருடத்தை முன்னிட்டு  விமானப்படை அங்கத்தவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகவாழ்  மக்கள் அனைவருக்கும் ஆசி வேண்டி விமானப்படை தலைமயக்கத்தில்  இரவு நேர பிரித் பூஜை வழிபாடுகள்  கங்காராம விகாரையின் விஹாராதிபதி  வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி  நாயக தேரர் தலைமையில் ஜனவரி 02ம் திகதி இடம் பெற்றது.

தொடர்ந்து  03 ம் திகதி  சர்வ மத தலைவர்களினால் பிராத்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள்  மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் சிவில் ஊழியர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .