Mayu / 2023 டிசெம்பர் 10 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை கறுப்பு தினமாக தெரிவித்து திருக்கோவிலில் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இவ் எதிர்ப்பு பேரணியானது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் திருக்கோவிலில் இன்று (10) முன்னெடுக்கப்பட்டது.

இவ் எதிர்ப்பு பேரணியானது திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் பொது சந்தைக் கட்டடத் தொகுதியில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதிவழியாக சென்று திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் ஆர்பாட்டம் இடம்பெற்று இருந்ததுடன் இவ் பேரணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட தாய்மார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.
இதன்போது பேரணியில் ஈடுபட்டு இருந்த தாய்மார்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டார்கள் கைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தவாறு கறுப்புக் துணிகளினால் கட்டி இலங்கை அரசின் மனித உரிமைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருந்தனர்.



12 minute ago
39 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
39 minute ago
20 Dec 2025
20 Dec 2025