Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 30 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு ஆஸ்திரேலியா மக்கள் ஒன்றியம் தமிழர் பாரம்பரியத்தை மறக்காமல் (AusKar)நடத்திய சித்திரைத்திருநாள் பெருவிழா சிட்னி லிட்டன் ஸ்ட்ரீட் பார்க் மைதானத்தில்,ஒஸ்கார் அமைப்பின் நடப்பாண்டுத் தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (28) சிறப்பாக நடைபெற்றது.
அதிதிகளாக ஒஸ்கார் அமைப்பின் போசகர்களான சிட்னியில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலை நிறுவிய உதயசூரியன் நாகமணி குணரெட்ணம், முன்னாள் பட்டய கணக்காளர் ரி.பிரகதீஸ்வரன், முன்னாள் பொறியியலாளர் எஸ்.சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்வில் ஆஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு பெருமக்கள் அனைவரும் பங்கு பற்றினார்கள்.
நான்கு மணி நேரமாக ஒரே குதூகலமாக நடைபெற்ற அந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரிசுகள் வழங்கப்பட்டதாக ஒஸ்கார் செயலாளர் திருச்செல்வம் லாவண்யன் தெரிவித்தார்.
வி.ரி. சகாதேவராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025