Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான தர்மரெட்ணம் சிவராமின் 15ஆவது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பில் நேற்று (29) அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டு.ஊடக அமையகத்தில் இந்த நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர யேமர் தி.சரவணபவன், ஊடகவியலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன், பொருளாளர் பு.சசிதரன் உட்பட ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஊடகவியலாளர் சிவராம், 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
1959, ஓகஸ்ட் 11இல் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், “தராகி” என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகையில் 1989 இல் தன் முதல் கட்டுரையை எழுதிவந்ததுடன், தமிழ் பத்திரிகைகளிலும் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவந்தார்.
தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வந்த சிவராம் அதற்காக பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன்னின்று உழைத்து, அதனை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற பெருமை தராகி சிவராமையே சாரும்.
(படங்கள் - வா.கிருஸ்ணா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago