Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 நவம்பர் 19 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் விசேட தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சனிக்கிழமை (18) இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதுடன், விசேட தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை கொழும்பு துறைமுக நகர திட்டம், ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல்வேறு சீன முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் அரச தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளது.
அத்துடன் குறித்த குழு கண்டி தலதா மாளிகை உள்ளிட்ட பல இடங்களுக்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில், பங்குபற்றிய பின்னர் சீன ஜனாதிபதியின் விசேட குழு நேற்று இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
28 minute ago
40 minute ago
58 minute ago